Enable Javscript for better performance
நலத்திட்ட விழிப்புணர்வு சட்ட சேவை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகள் சார்பில், பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட சட்ட சேவை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளரும், சார்பு நீதிபதியுமான கோவிந்தராஜன் தலைமை வகித்தார். 
    திருத்துறைப்பூண்டி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான கார்த்திகேயன், கால்நடைத்துறை இணை இயக்குநர் பாஸ்கரன், வட்டாட்சியர் கே. மகேஷ்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, தமிழ்ச்செல்வன், வழக்குரைஞர் சங்கத் தலைவர் ரஜினி, வழக்குரைஞர்கள் செந்தில்குமார், கந்தசாமி, ரவிச்சந்திரன், வேதமூர்த்தி, ராஜவேலு, சத்யராஜ் மற்றொரு செந்தில்குமார்ஆகியோர் பேசினர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன், ஆய்வாளர் அனந்தபத்மநாபன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், மகளிர் குழுவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முகாமில், வேளாண்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
    56 பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
    வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான கார்த்திகேயன் பேசுகையில்,  ஒவ்வொரு சாமானியனும் சட்டங்களை முழுமையாக அறிந்திட முடியாத நிலையில், பொதுமக்களுக்கு உதவுவதற்காக வட்ட அளவிலும், மாவட்ட அளவிலும்  சட்டப் பணிகள் குழு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்த வகையில் உதவி தேவைப்பட்டாலும் வட்ட சட்டப் பணிகள் குழுவை அணுகலாம் என்றார். 
    திருவாரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளரும், சார்பு நீதிபதியுமான கோவிந்தராஜன் பேசுகையில், 
    மாவட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக நிலுவையில் உள்ள வழக்குகளாக இருந்தாலும் சரி, நீதிமன்றத்துக்கு வராமல் இருக்கின்ற பிரச்னையாக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்டவர்கள் விருப்பப்பட்டால் அவர்களை அழைத்து சுமுக முடிவு காண உதவி செய்கிறோம். இதனால், கால நேரம் காக்கப்படுவதோடு பணவிரயம் ஆகாது என்றார். விரைவு நீதிமன்ற நீதிபதி அச்சுதன் வரவேற்றார். வட்ட சட்டப் பணிகள்குழு ஒருங்கிணைப்பாளர் அருள்மொழிவர்மன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai