Enable Javscript for better performance
நீடாமங்கலம் அரசு மருத்துவமனை சரிவர இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் அரசு மருத்துவமனை சரிவர இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 28th April 2018 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் அரசு மருத்துவமனை சரிவர இயங்கிட நடவடிக்கை எடுக்க  வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    இதுகுறித்து விவாயிகள் சங்க மாவட்டச் செயலரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினருமான வி.எஸ். கலியபெருமாள் வெளியிட்ட அறிக்கை:
    நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  நாள்தோறும் 600-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். 6 மருத்துவர்கள் இருக்க வேண்டிய மருத்துவமனையில் 3 மருத்துவர்களே பணியில் உள்ளனர். பகல் 12 மணிக்கு மேல் மருத்துவர்கள் இருப்பதில்லை. 24  மணிநேரமும் இயங்க வேண்டிய மருத்துவமனையில் மருத்துவர்கள்  24 மணிநேரமும் இல்லாததால், நோயாளிகள் மன்னார்குடி,திருவாரூர், தஞ்சாவூர் என வெளியூர்களுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலைவுள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனித்து அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    நீடாமங்கலம் ஒன்றியம், வையகளத்தூர் கிராம விவசாயிகள் வலங்கைமான் வட்டம், பயத்தஞ்சேரியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் போட்டு 50 நாளாகியும் பணப் பட்டுவாடா செய்யாமல் உள்ளனர். நீர்நிலைகளை பாதுகாக்க ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும்.
    நீடாமங்கலம் ஒன்றியம் 27, செருமங்கலம் ஊராட்சி அன்னபுரம் காலனி தெருவில் 50 குடும்பங்கள் உள்ளன.
    மிகப்பெரிய போராட்டத்துக்கு பின்பு குடியிருக்கும் இடம் நத்தம் புறம்போக்கு சர்வே செய்து ஓராண்டாகியும் இதுவரை பட்டா வழங்காத நிலைவுள்ளது. உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
    நீடாமங்கலம் நகரில் ரயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்திட போக்குவரத்து காவலர்களை நியமிக்க  வேண்டும். அம்மையப்பணிலிருந்து திருக்கண்ணமங்கை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அதை சீர்படுத்திட வேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai