Enable Javscript for better performance
நீடாமங்கலம் வட்ட அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் வட்ட அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க கூட்டம்

    By DIN  |   Published on : 28th April 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நீடாமங்கலம் வட்டக் கிளை பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் எம். மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தவமணி, மாவட்டத் தலைவர் சாந்தி, மாவட்டப் பொருளாளர் ராஜலெட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வன், அரசு ஊழியர் சங்க வட்டச் செயலர் கோ. கௌதமன், வட்டப் பொருளாளர் ஆர். முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கோடைகால விடுமுறை ஒருமாதம் வழங்க வேண்டும். மே 8 -இல் நடைபெறும் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் முழுமையாக கலந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சங்க நிர்வாகி பி. சுமதி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai