Enable Javscript for better performance
பள்ளியில் புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதில், பள்ளிச் செயலர் ஜோதிபழனிவேல், ஆசிரியர்கள் கி. சேதுரத்தினம், வீ. சாம்பசிவம், வர்த்தகர் சங்கத் தலைவர் ராஜாராமன், உதவும் மனங்கள் அமைப்பின் தலைவர் எஸ்.எஸ். குமார், கல்வி புரவலர்கள் ஜெயகுமார், ராம்ராஜ், நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    தலைமையாசிரியை தேவிலெட்சுமி வரவேற்றார்.  பள்ளி இணைச் செயலாளர் ஜெகதீஸ்பாபு நன்றி கூறினார்.
    நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai