Enable Javscript for better performance
பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம், 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
    மன்னார்குடி அசேசம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த அய்யப்பன் மனைவி தேவி (35). இவர், தனது சகோதரி சொர்ணாவை அழைத்துக்கொண்டு, வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சஞ்சீவித் தெரு பகுதியில் சென்றுகொண்டிருந்தார். இவர்கள் அம்மாக்குளம் என்ற இடத்தருகே சென்றபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், தேவி ஓட்டிச்சென்ற வாகனத்தின் மீது மோதினர். இதனால், நிலைதடுமாறிய தேவி கீழே விழுந்தார். அப்போது, தேவி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.  இதுகுறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai