Enable Javscript for better performance
மாணவியை கடத்தியதாக சுமை வாகன ஓட்டுநர் மீது புகார்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே பிளஸ்-2 மாணவியை, சுமை வாகன ஓட்டுநர் கடத்திச் சென்றதாக மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.
    வடுவூர் வடபாதியைச் சேர்ந்த 17வயதுடைய மாணவி, ஒரத்தநாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தவர்.சில தினங்களுக்கு முன் பிளஸ்-2 பொதுத் தேர்வு நிறைவடைந்ததையடுத்து, வீட்டில் இருந்துவந்த மாணவியை ஏப். 20-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து, மாணவியின் தந்தை வடுவூர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.27)  புகார் அளித்தார். அதில்,  தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்றும், ஒரத்தநாடு அருகேயுள்ள தலையாமங்கலத்தைச் சேர்ந்த சுமை வாகன ஓட்டுநரான யோகராஜா (19) கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  இதுகுறித்து வடுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai