Enable Javscript for better performance
மே 1-இல் கிராம சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில், மே. 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே. 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 
    கூட்டத்தில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல்,  கொசுக்கள் மூலம் பரவும் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், கிராம வளர்ச்சித் திட்டங்கள், வறுமை ஒழிப்பு இயக்கமான அந்தியோதயா இயக்கம் குறித்து விவாதித்தல்,  கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினம் குறித்து விவாதித்தல், பசுமை வீடுகள் திட்டம் 2018-19 பயனாளிகள் தேர்வை சபையில் ஒப்புதல் பெறுதல்.
    பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) பயனாளிகள் தேர்வு சபையில் அங்கீரித்தல், திறந்த வெளியில் மலம் கழித்தலினால் ஏற்படும் தீமைகள் மற்றும் கழிப்பறை கட்டுவதன் அவசியத்தை  சபையில் எடுத்துரைத்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து சபையில் விவாதித்தல்,  ஊராட்சிப் பகுதிகளில்  நடைபெறும் திட்டப் பணிகள் மற்றும் ஊராட்சி நிதிநிலை குறித்து விவாதித்தல்.
    பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு செல்ல மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பான சபையில் விவாதித்தல் ஆகியவை நடைபெறும். 
    மேலும்,  ஊராட்சி தனி அலுவலர் அனுமதியுடன் சபையில் கொண்டு வரப்படும் இதர கருத்துகள் குறித்தும் விவாதிக்கப்படும். கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பொது மக்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள்,  தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai