Enable Javscript for better performance
ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயில் தேரோட்டம்

    By DIN  |   Published on : 29th April 2018 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் சித்திரை தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ஆ ம் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு நாள்தோறும் அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, இரவு சந்திரசேகரர் வீதியுலாவும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
    ஒன்பதாம் திருவிழாவான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை கல்விக்குடி சின்னதுரை மழவராயர் மற்றும் குடும்பத்தினர் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர். குருபகவான் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    தொடர்ந்து, திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, நாகசுவர இன்னிசை, கிராமிய வாத்தியங்கள், வாணவேடிக்கைகள் முழங்க தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்தது.
    விழாவில், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ச. கிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    மாலையில் பாபநாசம் ஸ்ரீரெங்க கீர்த்தனை சங்கீத வித்யாலயா மாணவியரின் பரதநாட்டியம் நடைபெற்றது. வரும் 30-ஆம் தேதி சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai