Enable Javscript for better performance
பொது நுழைவுத்தேர்வு: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 2,657 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    பொது நுழைவுத்தேர்வு: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 2,657 பேர் எழுதினர்

    By DIN  |   Published on : 29th April 2018 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுநுழைவுத்தேர்வை 2,657 பேர் எழுதினர்.
    இந்தியாவில் உள்ள 10 மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை, 5 ஆண்டு ஒருங்கிணைந்த மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    இதற்காக சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, திருவாரூர் என தமிழ்நாட்டில் 6 தேர்வு மையங்களும், இந்தியா முழுவதும் 72 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
    தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர 60,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. கடந்த ஆண்டு 40,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நிகழாண்டில் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
    இதில் திருவாரூர் தேர்வு மையத்தில் 2,657 பேர் சனிக்கிழமை தேர்வு எழுதினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai