Enable Javscript for better performance
மே 1 முதல் கோடை கால கலைப் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட இசைப்பள்ளியில் மே 1 முதல் கலைப் பயிற்சிக்கான முகாம் நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து, கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் இரா. குணசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்டந்தோறும் ஜவகர் சிறுவர் மன்றம் அமைப்பை ஏற்படுத்தி, 5 வயது முதல் 16 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு குரலிசை, நடனம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் போன்ற கலைப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
    2018-19 ஆம் ஆண்டுக்கான கோடைகால கலைப் பயிற்சி முகாம் மாவட்ட அளவில் மே 1 முதல் மே 10 வரையில் 10 நாள்கள் திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் நடைபெறவுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது முதல் 16 வயதிற்குள்பட்ட குழந்தைகள் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் மே 1 காலை 9 மணிக்கு திருவாரூர் வாசன் நகரில் இயங்கிவரும் (ஸ்ரீசாய்பாபா கோயில் அருகில்) மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நடைபெறும் கோடைகால கலைப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai