Enable Javscript for better performance
வயலுக்குச் சென்று விவசாயிகளிடம் குறைகள் கேட்ட முதல்வர்- Dinamani

சுடச்சுட

    

    வயலுக்குச் சென்று விவசாயிகளிடம் குறைகள் கேட்ட முதல்வர்

    By DIN  |   Published on : 29th April 2018 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கொண்டியாறு பகுதியில் சாகுபடிக்கான வேலைகள் நடைபெற்ற வயலில் இறங்கி நடந்து சென்று விவசாயிகளிடமும், விவசாயத் தொழிலாளர்களிடமும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை குறைகளைக் கேட்டறிந்தார்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, திருவாரூர் மாவட்ட எல்லையான நீடாமங்கலம் ஒன்றியம், கோயில் வெண்ணியில் சனிக்கிழமை மாலை 4.20 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    அங்கிருந்து திருவாரூர் நோக்கி காரில் புறப்பட்டுச் சென்ற முதல்வர் பழனிசாமி, நீடாமங்கலம் அருகே தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கொண்டியாறு பகுதியில் சாகுபடிக்கான வேலைகள் நடைபெற்ற வயலில் இறங்கி நடந்து சென்று விவசாயிகளிடமும், விவசாயத் தொழிலாளர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.
    மேலும், பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதி கூறினார்.
    விவசாயிகளுக்கு சால்வை அணிவித்த முதல்வர், தானும் ஒரு விவசாயிதான் என்று கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai