Enable Javscript for better performance
அரிவாள் வெட்டில் காயமடைந்தவர் சாவு: இளைஞர் நீதிமன்றத்தில் சரண்- Dinamani

சுடச்சுட

    

    அரிவாள் வெட்டில் காயமடைந்தவர் சாவு: இளைஞர் நீதிமன்றத்தில் சரண்

    By DIN  |   Published on : 30th April 2018 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி அருகே அரிவாளால் வெட்டிய சித்தப்பா சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்ததை அடுத்து, வழக்கில் தொடர்புடைய இளைஞர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 
    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் இளையராஜா (38). இவர் ஏப்.25-ஆம் தேதி வீட்டருகே மதுப்போதையில் வீண்தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், இதை அவரது சித்தப்பா ஜி. கோவிந்தராஜ் (75) என்பவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த இளையராஜா, கோவிந்தராஜை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை கோவிந்தராஜ் உயிரிழந்தார்.
    இந்நிலையில், சித்தப்பாவை அரிவாளல் வெட்டிவிட்டு தப்பியோடிய இளையராஜாவை பரவாக்கோட்டை போலீஸார் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை மதுரை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா சரணடைந்தார். இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai