Enable Javscript for better performance
ஆலங்குடி கோயிலில் சித்திரை திருவிழா தீர்த்தவாரி- Dinamani

சுடச்சுட

    

    நவகிரக தலங்களில் குருபரிகார தலமான வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் சித்திரைப் பெருந் திருவிழாவின் 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    இதையொட்டி, காலை 7.30 மணிக்கு  ஸ்ரீநடராஜர் சிவகாமசுந்தரி புறப்பாடும், தொடர்ந்து காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரியும், காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கலசாபிஷேகமும் நடைபெற்றது.
    பின்னர், மாலையில் குடந்தை எம். ரவிச்சந்திரனின் இசைக் கச்சேரியும், இரவு 7 மணிக்கு த்வஜாரோகணமும், தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் சந்திரசேகரர் புறப்பாடும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai