Enable Javscript for better performance
காவிரி: மன்னார்குடியில் கிறிஸ்தவ அமைப்பினர் கண்டன பேரணி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி: மன்னார்குடியில் கிறிஸ்தவ அமைப்பினர் கண்டன பேரணி

    By DIN  |   Published on : 30th April 2018 02:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய, மாநில அரசைக் கண்டித்து, மன்னார்குடியில் கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் கண்டன பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    மார்டன்நகரில் உள்ள அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்திலிருந்து தொடங்கியப் பேரணிக்கு, பங்கு தந்தை அருள்ராஜ் தலைமை வகித்தார். பின்னர் ருக்மணி பாளையம், தேரடி, மேலராஜவீதி, பெரியக்கடைத் தெரு, காந்திஜி சாலை, வ.உ.சி. சாலை வழியாகச் சென்று, வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே பேரணி நிறைவடைந்தது.
    இதில், மன்னார்குடி அற்புதக் குழந்தை இயேசு திருத்தலம், புனித சூசையப்பர் ஆலயம், ஆதிச்சபுரம் புனித அந்தோணியார் ஆலையத்தைச் சேர்ந்தவர்கள், கையில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai