Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகேயுள்ள தென்பரை கிராமத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை  வலியுறுத்தி, விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    தென்பரை பிரதான சாலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு நீர் பாசனக் கமிட்டி பொருளாளர் சா. கண்ணதாசன் தலைமை வகித்தார். காவிரி உரிமை மீட்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வம், திருமேணி ஏரி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி கலைவாணி மோகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 
    இதில் தென்பரை ஊராட்சிக்குள்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai