Enable Javscript for better performance
கூத்தாநல்லூர்: புதிய வீட்டு மனைப் பிரிவில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர்: புதிய வீட்டு மனைப் பிரிவில் முப்பெரும் விழா

    By DIN  |   Published on : 30th April 2018 02:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூத்தாநல்லூர் அருகே உருவாக்கப்பட்டுள்ள பியூலைன் என்கிளேவ் புதிய வீட்டு மனைப் பிரிவில், மனைகள் வாங்கிய 84 பேருக்கு தங்க நாணயம் வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    கூத்தாநல்லூர்  வட்டம், திருவாரூர்- மன்னார்குடி பிரதான சாலையில் சித்தனக்குடி ஊராட்சியில் பியூலைன் என்கிளேவ் என்ற புதிய வீட்டு மனைப்பிரிவு வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு, சித்திரை மாத விற்பனை, கிராமியத் திருவிழா மற்றும் மனைகள் வாங்கிய டாக்டர் விஜயா, சுபாநிஷா, ஏ. கண்ணன், பி. பன்னீர்செல்வம், எல். முருகானந்தம், மேகலா, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 84 பேருக்கு தலா 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
    இதையொட்டி சிலம்பாட்டம், கம்பு சண்டை, தேவர்கண்டநல்லூர்  கஸ்தூரி கலியமூர்த்தி குழுவினரின் கிராமிய நடனம், குளிக்கரை  நாகசுரம், தப்பாட்டம்  உள்ளிட்ட  கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்றன. மேலும், யாக பூஜைகளும் நடத்தப்பட்டன. இதில் பியூலைன் என்கிளேவ் வீட்டு மனைப் பிரிவு நிர்வாக இயக்குநர் வி. கண்ணன், இயக்குநர் ஸ்ரீகாந்த் ராமநாதன்   உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
    இதுகுறித்து, இயக்குநர் ஸ்ரீகாந்த் ராமநாதன் கூறியது:
    இங்கு, 450  சதுர அடி முதல் 3,600  சதுர அடி வரையிலும்  மனைப் பிரிவுகள்  உள்ளன. 30 அடிக்கு  தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் பூங்கா  அமைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள பிரதான சாலையில் திருமண மண்டபம் கட்டப்பட  உள்ளது. உடனே  வீடு  கட்டுபவர்களுக்கு, ரூ. 36 ஆயிரம் மதிப்புள்ள 100  மூட்டைகள் சிமெண்ட் வழங்கப்படுகிறது 
    என்றார்.
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலாளர் ஆர். அகோரம், ப்ரவீன்  ஜெயராமன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai