Enable Javscript for better performance
சித்ரா பௌர்ணமி: எட்டுக்குடி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை- Dinamani

சுடச்சுட

    

    சித்ரா பௌர்ணமி: எட்டுக்குடி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

    By DIN  |   Published on : 30th April 2018 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு எட்டுக்குடி முருகன் கோயிலுக்கு திருவாரூர் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காவடிகள் சுமந்து பாத யாத்திரையாக சென்றனர். 
    எட்டுக்குடி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதற்காக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக, அழகுக் காவடிகள் மற்றும் பால் குடங்கள் சுமந்து செல்வது வழக்கம்.
     சித்திரை மாதத்தில் அறுவடைப் பணிகள் முடிவடைந்து விடுவதால், பக்தர்கள் வயல் வழியாக நடந்து சென்று கோயிலை அடைவர். 
    வெயிலில் நடந்து செல்கையில் அவர்களின் களைப்பைப் போக்கவும், புத்துணர்ச்சி அளிக்கவும் செல்லுமிடங்களில் பானகம், நீர்மோர், குளிர்பானங்கள்  உள்ளிட்டவற்றை அந்தந்தப் பகுதி பக்தர்கள் வழங்குவர்.  
    நிகழாண்டு திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானப் பக்தர்கள் காவடிகளுடன் பாத யாத்திரையாக எட்டுக்குடி முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai