Enable Javscript for better performance
திருவாரூர் மாவட்டத்தில் 18 மதுபானக் கடைகள்  மூடல்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த 18 அரசு மதுபானக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.
    பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய உள்ளாட்சி பகுதிகளில் அந்தச் சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடாமல், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தால், அந்த கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த மதுபானக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 18 அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
      இதில் திருவாரூர் நகர் பகுதி, பனகல் சாலை, பழைய- புதிய பேருந்து நிலையம், உள்ளிட்ட 8 அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டன. தவிர திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 கடைகள் மூடப்பட்டன. அத்துடன் திருவாரூரில் தனியார் பார்கள், ஹோட்டல்களில் இருந்த பார்களும்  மூடப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai