Enable Javscript for better performance
நான்கு இடங்களில் கதண்டுகள் அழிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு  4 இடங்களில் கதண்டுகள் அழிக்கப்பட்டன.
    இதுகுறித்து, தீயணைப்பு நிலைய அலுவலர் கே. ராஜேந்திரன் கூறியது:
    கூத்தாநல்லூர்- கொரடாச்சேரி பிரதானச் சாலை சேகரையில், முரளிதரன் என்பவரது வீட்டுக் குளியலறை, பூதமங்கலம் புதுத்தெரு சாகுல் அமீது வீடு, வேளுக்குடி  கீழத்தெருவில் வெங்கடேசன் என்பவரது  மூங்கில் குத்து, சாத்தனூர் கீழத்தெருவில் கே. சுப்ரமணியன் என்பவரது  வீட்டுக்கொல்லை ஆகிய 4  இடங்களில் கதண்டுகள் இருப்பதாக தகவல் வந்தது.
    அதன்பேரில், எனது தலைமையில் தீயணைப்பு அலுவலர்கள் சுகேந்திரன், ஜெகதீசன், போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம், ராமசுப்பு உள்ளிட்டோர் நான்கு இடங்களுக்கும் சென்று கதண்டுகளை அழித்தோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai