Enable Javscript for better performance
மன்னார்குடியில் அம்மா அணி அலுவலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் (அதிமுக) அம்மா அணியின் மாவட்ட கட்சி அலுவலகத்தை சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். பின்னர், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
     இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  மறைந்த முன்னாள் அமைச்சர் அழகுதிருநாவுக்கரசால் அரசியலில் இணைந்து, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தலைமையை ஏற்று அதிமுகவில் செயல்பட்டு வந்துள்ளேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவும், பிரச்னைக்குப் பிறகு அதிமுக அம்மா அணி தொடங்கவும் என்னுடைய பங்களிப்பு அதிகளவில் இருந்தது.  
    சென்னையிலும் அம்மா அணி தலைமை அலுவலகம் திறக்கப்படும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கொள்கையையொட்டி சசிகலாவின் வழிகாட்டுதலுடன், நான் (திவாகரன்) தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுவேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai