Enable Javscript for better performance
முத்துகாமாட்சி அம்மன் கோயில் தீமிதி உத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகேயுள்ள அம்மனூர் - கொத்தங்குடி ஸ்ரீமுத்துகாமாட்சி அம்மன் கோயிலில் 64 -ஆவது  ஆண்டு சித்திரை பெருவிழாவையொட்டி தீமிதி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
    அம்மனூர்-கொத்தங்குடியில் ஸ்ரீமுத்துகாமாட்சி அம்மன், காத்தவராய சுவாமி, பத்திரகாளியம்மன் கோயில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா ஏப்.22-ஆம் தேதி தொடங் நாள்தோறும் இரவு அம்பாள் பிராகார வீதியுலா நடைபெற்றது.   விழாவின், முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான பால்காவடி அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, சிவன்கோயிலில் வேப்பிலை மற்றும் பால் காவடிகளுக்கு  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அங்குள்ள வீதிகள் வழியாக காவடி ஊர்வலம் முத்துகாமாட்சி அம்மன் கோயிலை அடைந்தது. அங்கு அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  பின்னர், மாலை நடைபெற்ற விழாவில் தீமிதி பக்தர்களுக்கு கங்கணதாரணம் செய்யப்பட்டு, பூங்கரகம், அக்னி கப்பரை, செடில் காவடிகள் ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து, முத்துகாமாட்சி அம்மன் கோயில் எதிரில் தீமிதி இறங்கும் உத்ஸவம் நடைபெற்றது.  இதில், ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி,  நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவையொட்டி, இரவு  மின் அலங்கார சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது. 
    ரதக்காவடி: விழாவையொட்டி திங்கள்கிழமை (ஏப்.30) ரதக் காவடி ஊர்வலம், மே.2-இல் ஸ்ரீ வள்ளித் திருமணம் நாடகம், மே.3-இல் அரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் நடைபெறுகிறது. மே.4-ஆம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai