Enable Javscript for better performance
இருசக்கர வாகனம் திருட்டு: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் இருசக்கர வாகனத்தைத் திருடியதாக இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    நீடாமங்கலம் புதுத்தெருவில் வசிக்கும் துரைமுருகன் மற்றும் ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகியோரது இருசக்கர வாகனங்கள் முறையே கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் திருட்டுப் போனது. இது தொடர்பான புகாரின்பேரில், நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
    இந்நிலையில் வலங்கைமான் வட்டம், புலவர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் நவநீதகிருஷ்ணன் (22), திருவையாறு வட்டம், திங்களூர் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முத்தழகன் (28) ஆகியோரை நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் பழனிசாமி மற்றும் போலீஸார்  பிடித்து விசாரணை நடத்தினர்.
    விசாரணையில், மேற்படி இருவரது இருசக்கர வாகனத்தையும் திருடியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
    அவர்களைக் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ஓர் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய திருக்காட்டுப்பள்ளி கூடநாணல் பகுதியைச் சேர்ந்த தங்கதுரையை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai