சுடச்சுட

  

  100 நாள் வேலைத் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையில் கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  திருவாரூரில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு புதன்கிழமை நிறைவடைந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தவிர, கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானத்துடன் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:
  தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய கூலித்தொகை ரூ. 600 கோடியை எடுத்து 1,000 மகளிர் விற்பனை கூடங்கள் அமைக்க மத்திய அரசு உதவியுடன் மாநில அரசு திட்டமிட்டு கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவித்ததை திரும்பப்பெற வேண்டும், சட்டப்படி பொருள்கள் செலவீனம் 40 சதவீதத்துக்கு மேல் போகாமல் செயல்படுத்த வேண்டும், ஆண்டுக்கு 100 நாள்கள் என்பதை 250 நாள்களாக உயர்த்தி தர வேண்டும், தினக்கூலி ரூ. 500 வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்ட விதிமுறைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும், தனிநபர் உணவு பெறும் உரிமையை மறுக்கும் விதமாக தனிநபர் குடும்ப அட்டையை ரத்து செய்யக் கூடாது, தனிநபருக்கு உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும், முன்னுரிமை குடும்பங்கள், முன்னுரிமையற்ற குடும்பங்கள் என்கிற ஸ்மார்ட் கார்டு நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விரைந்து குடும்பஅட்டை வழங்க வேண்டும். 
  மத்திய, மாநில அரசுகள் டெல்டாவை ரசாயன மண்டலமாக அறிவித்ததை ரத்துசெய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், காவிரி நீர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கான முக்கிய ஆதாரமாக உள்ள பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும், தமிழகத்தில் உள்ள அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளை புதுப்பித்துக் கொள்ள நிதி உதவியும் தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச தொகுப்பு வீடும் கட்டிக்கொடுக்க வேண்டும், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் முத்ரா திட்டத்தில் எந்தவிதமான நிபந்தனையுமின்றி வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், தமிழகத்தில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுவரும் மணல் குவாரிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், மண் வளங்கள் இருக்கும் இடங்களை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும். 
  வெட்டப்பட்ட கரும்பை லாரி மற்றும் டிராக்டரில் ஏற்றி எடுத்துச் செல்லும்போது கட்டு அவிழ்ந்து கரும்பு கொட்டிவிட்டால் இரவு எந்தநேரம் ஆனாலும் சென்று சரிசெய்து கயிறுகட்டி அனுப்பவேண்டும், இரவு நேரங்களில் வெளியில் செல்வதால் ஆலை நிர்வாகம் தற்காலிக அடையாள அட்டை வழங்க வேண்டும், லாரி மற்றும் டிராக்டரிலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலோ கரும்பு வெட்டும்போது கைகால்களை வெட்டிக்கொண்டாலோ உரிய இழப்பீட்டை ஆலை நிர்வாகம் உடனே வழங்க வேண்டும், முத்துப்பேட்டை அலையாத்திக் காட்டு பகுதியை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும், கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவேண்டும். நீண்ட காலமாக குடியிருந்து வரும் ஏழை எளியோருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai