சுடச்சுட

  

  மன்னார்குடி அஞ்சல் உபகோட்டத்தில் ஊழியர்கள் 10 -ஆவது நாளாக வியாழக்கிழமை பணிப் புறக்கணிப்பு செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஊதிய உயர்வுக்காக அமைக்கப்பட்ட கமலேஷ்சந்திரா கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னார்குடி மேலராஜவீதியில் உள்ள தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் கிளைச் செயலர் எம். உதயகுமார் தலைமை வகித்தார்.
  கோரிக்கையை விளக்கி சங்கத் தலைவர் ஆர். தமிழ்ச்செல்வன், பொருளாளர் ஏ. பண்டரிநாதன் ஆகியோர் பேசினர். ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பி. பக்கிரிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி. கணேசன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.
  இதில், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ஆள்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்புச் செய்யக் கூடாது, அஞ்சலகங்களை மூடும் திட்டத்தைக் கைவிட வேண்டும், அஞ்சல்துறையைத் தனியார் மயமாக்குவதை நிறுத்திட வேண்டும், 7 -ஆவது ஊதியக்குழு கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமானப் பரிந்துரைகளை காலதாமதமின்றி அமல்படுத்திட வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai