சுடச்சுட

  

  கூத்தாநல்லூர் விளையாட்டுத் திடலில் மேடை அமைக்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 01st June 2018 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் விளையாட்டுத் திடலில் மேடை அமைக்கக் கோரி, இளம் இரத்தக் கால்பந்தாட்டக் கிளப் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து இளம்  இரத்தக் கால்பந்தாட்டக் கிளப் செயலாளர்  எம்.எம். அஹமது அலி கூறியது:
  கூத்தாநல்லூர் நகரம், அல்லிக்கேணியில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு உயர்கோபுர விளக்கு அமைத்துக் கொடுத்ததற்கு கிளப்  மற்றும்  வீரர்கள் சார்பில், நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
  இதேபோல், கூத்தாநல்லூர் நகர பெரியப்பள்ளி, பாய்க்காரத் தெரு, ஆலிம் சாஹிப் தர்ஹா, லெட்சுமாங்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட  இடங்களில் உயர்கோபுர விளக்கு அமைத்துத் தர  வேண்டும். மேலும், அல்லிக்கேணி விளையாட்டுத் திடலில், மேடையும், விளையாட்டின்போது, பார்வையாளர்கள் உட்கார்ந்து  பார்க்கும்படி சுற்றிலும் இருக்கைகள் அமைத்துத் தர வேண்டும் என  இளம் இரத்தக் கால்பந்தாட்டக் கிளப் சார்பில், நாகை மக்களவை உறுப்பினர் கே. கோபாலுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai