சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி நீதிமன்ற வளாகத்திலிருந்து வியாழக்கிழமை தப்பியோடிய கைதியை போலீஸார் தேடிவருகின்றனர்.
  முத்துப்பேட்டை அருகேயுள்ள பேட்டை செளந்தரேசுவரர் கோயிலில் அம்மனின் தாலி உள்ளிட்ட பொருள்கள் அண்மையில் திருட்டுப் போனது. இதுதொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கொடிவயல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மனோகரன் (27) என்பவரை முத்துப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரைஆஜர்படுத்துவதற்காக திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, மனோகரன் தப்பியோடிவிட்டார்.  இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து, மனோகரனை தேடிவருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai