சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கற்பகவல்லி ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவுபெறுவதையொட்டி, சம்வத்ஸ்ரா அபிஷேகம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின. சிவாச்சாரியார்களின் வேதமந்திரம் மகா பூர்ணாஹுதி கடம் புறப்பாடு பஞ்சமூர்த்திகளுக்கு  மகா அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தா. அரவிந்தன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai