சுடச்சுட

  

  கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை  சிறப்பு பூஜை நடைபெற்றது.
  லெட்சுமாங்குடியில் உள்ள ஷீரடி சாய்பாபா தியான பீடத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை கோயிலின் நிர்வாகி வி.ஆர். வெள்ளையன் ஏற்பாட்டின்படி, ஷீரடி சாய்பாபாவுக்கும், சாய்பாபாவின் பாதங்களுக்கும், மஞ்சள் பொடி, பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட  அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம்  செய்யப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சாய்பாபாவுக்கு மஹா தீபாராதனை  காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
  இதேபோல், சித்தாம்பூர் ஷீரடி சாய்பாபா கோயிலில், சிறப்பு  பூஜை செய்யப்பட்டு,  தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai