சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆண்டு வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 83 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
  நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நிறைவு நாளான வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார்.
  நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட நன்னிலம், கீழ்குடி, ஸ்ரீவாஞ்சியம், சேங்கனூர், பருத்தியூர், வீதிவிடங்கன், பூங்குளம், சலிப்பேரி, தட்டாத்திமூலை, ஆணைக்குப்பம் ஆகிய 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாற்றம், நில அளவை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 127 மனுக்கள் அளிக்கப்பட்டன. இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
   பின்னர் 32 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, 4 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆணை, 16 நபர்களுக்கு விதவை உதவித் தொகைக்கான ஆணை, 23 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை, 6 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணை,  ஒருவருக்கு ரூ. 22 ஆயிரம் மதிப்பில் இறப்பு உதவித் தொகைக்கான காசோலை, 1 நபருக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 83 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் ரெங்கசாமி, வட்டாட்சியர் அன்பழகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai