சுடச்சுட

  

  நீடாமங்கலத்திலிருந்து 950 டன் சன்னரக நெல் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைப்பு

  By DIN  |   Published on : 01st June 2018 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில் இருப்பு வைக்கப்பட்ட நெல் ஆக 950 டன் எடையுள்ள நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. 
  சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 26 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து, நெல் மூட்டைகள் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai