சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விவசாயி ஒருவரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் புதன்கிழமை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
  முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாயியான இவர், பட்டுக்கோட்டை என்ஜிஓ காலனியைச் சேர்ந்த வேம்பையன் என்பவரிடம் நிலம் வாங்கினார். இதையொட்டி, பத்திரப்பதிவுக்காக முத்துப்பேட்டை சார் பதிவாளர் டி. உதயகுமாரை அணுகியபோது, அவர் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
  லஞ்சம் தர விரும்பாத பாலசுப்பிரமணியன், இதுபற்றி நாகை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். பின்னர், அப்பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் காந்திமதிநாதன் கொடுத்த ஆலோசனையின்பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ.4 ஆயிரத்தை சார் பதிவாளர் உதயகுமாரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்து கண்காணித்த துணைக் கண்காணிப்பாளர் காந்திமதிநாதன், காவல் ஆய்வாளர் தமிழரசி ஆகியோரது தலைமையிலான ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார், சார் பதிவாளரை கையும், களவுமாக கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai