சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், வங்கி பணிகள் முடங்கின.
  பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் கடந்த 2 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீடாமங்கலம், வலங்கைமான்  பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பூட்டப்பட்டிருந்தன. ஏடிஎம் மையங்களிலும் பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். மாதத்தின் இறுதி நாளான 31-ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஊதியத்தை எடுக்க முடியாமலும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற முடியாமலும் அவதிக்குள்ளாயினர். வர்த்தகர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai