சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே இருசக்கர வாகனங்கள் வியாழக்கிழமை மோதிக் கொண்டதில், தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். கூட்டுறவு வங்கி எழுத்தர் காயமடைந்தார்.
    கோட்டூரை அடுத்த களப்பால் சோலையன்குளத்தைச் சேர்ந்தவர் கல்யாணம் மகன் தினேஷ் (24). இவர் எடகீழையூரில் உள்ள ஏரியைத் தூர்வாரும் தனியார் நிறுவனத்தில், மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை, ராஜ்நகரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் இளங்கோவன்(45). இவர் வடுவூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
    இந்நிலையில், மன்னார்குடி- தஞ்சை பிரதான சாலையில், செருமங்கலம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் தினேஷ் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே இளங்கோவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி, தினேஷ் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், தினேஷ் உயிரிழந்தார்.
    இதுகுறித்து வடுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai