சுடச்சுட

  

  கோடை விடுமுறைக்குப்பின், வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றனர். 
  கடந்த கல்வியாண்டில், அரசு பொதுத் தேர்வுகள் மற்றும் முழுவாண்டுத் தேர்வுகள் முடிந்து, ஏப்.21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. 
  சுமார் ஒன்றரை மாதம் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்தபடி, மாநிலம் முழுவதும் நிகழ் கல்வியாண்டுக்காக பள்ளிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 1)
  திறக்கப்பட்டன.  
  அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், குடவாசல், கொரடாச்சேரி, மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்டப் பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள்,  உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் என அனைத்து அரசுப் பள்ளிகளும் திறக்கப்பட்டன.  சில தனியார் பள்ளிகள் தவிர பெரும்பாலான தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டன. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றனர். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் முதல் நாள் அன்றே மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்குப் புதிய பாடத் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்புத்தகங்களைப் பெற்ற மாணவ, மாணவியர் அதை ஆர்வமுடன் படித்துப் பார்த்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai