சுடச்சுட

    

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக அரசு பதவி விலக வேண்டும்: அமமுக தீர்மானம்

    By DIN  |   Published on : 02nd June 2018 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 13 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும் என மன்னார்குடியில் அண்மையில் நடைபெற்ற அமமுக மாவட்டச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். காமராஜ் தலைமை வகித்தார். இதில், மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், 4 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பது, ஜூன் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெறவுள்ள கட்சியின் தலைமைக் கழக அலுவலகத் திறப்பு விழாவுக்கு அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் கலந்துகொள்வது, ஜூன் 10-ஆம் தேதி மன்னார்குடியில் கட்சியின் துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது,
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான என். ரெங்கசாமி கலந்துகொண்டார். முன்னாள் எம்எல்ஏ கு. சீனிவாசன், நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா. ராஜமாணிக்கம், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலர் சத்தியமூர்த்தி, தேர்தல் பணிக்குழுச் செயலர் க. மலர்வேந்தன், நகரச் செயலர் ஆ. ஆனந்தராஜ், ஒன்றியச் செயலர் க. அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai