சுடச்சுட

  

  விவசாயிகள் மண் மற்றும் நீர் பரிசோதனை செய்து பயன்பெறலாம்

  By DIN  |   Published on : 02nd June 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயிகள் தங்களது நிலம் மற்றும் தண்ணீரின் தன்மை குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் மையத்தில் ஆய்வு செய்து பரிந்துரைக்கப்படும் உரங்களை பயன்படுத்தி கூடுதல் விளைச்சல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. பாஸ்கரன், மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் அனுராதா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தேவைக்கேற்ப அதிகமாக ரசாயன உரங்கள் உபயோகிப்பதை தடுக்க, பயிர் அறுவடைக்குப் பின் மண்ணில் உள்ள ஊட்டச் சத்துக்கள் குறைவதை அறிய, மண் அரிப்பு,  நீர் கரை ஓட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணத்தால் மண் வளம் குன்றிவிடுவதை அறிய மண் பரிசோதனை அவசியம்.
  மேலும், பயிரின் தேவை , மண்ணின் தன்மை உரஉபயோகத்திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப  உர நிர்வாகம் மேற்கொள்வதற்கு  மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரி விகித சமஅளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம். வேளாண்மை அறிவியல் நிலையம் , நீடாமங்கலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மண் மற்றும் நீர் ஆய்வகத்தில் மண் மற்றும் நீர் ஆய்வு செய்து அதற்கேற்ற உரப்பரிந்துரைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு மண் மாதிரிக்கு ரூ. 100, நீர் ஆய்வுக்கு ரூ. 50 சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விவசாயிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04367-260666, 261444 தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai