Enable Javscript for better performance
விஷம் வைத்து 2 ஆடுகள் சாகடிக்கப்பட்டதாக புகார்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் விஷம் கலந்த உணவை வைத்து, 2 ஆடுகள் சாகடிக்கப்பட்டதாக போலீஸில் வியாழக்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெருகவாழ்ந்தானை அடுத்த குறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜீ. சரிதா. இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த முருகேசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், சரிதா வளர்க்கும் 2 ஆடுகள், வியாழக்கிழமை மாலை இறந்து கிடந்தன.
    இதுகுறித்து பெருகவாழ்ந்தான் காவல்நிலையத்தில் புகார் அளித்த சரிதா, முன்விரோதம் காரணமாக முருகேசன் தனது ஆடுகளுக்கு விஷம் கலந்த உணவை வைத்து சாகடித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai