சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டியில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள், 12- ஆவது நாளான சனிக்கிழமை  அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
  7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் 12-ஆவது நாளான சனிக்கிழமை (ஜூன் 2) திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகம் முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள்100-க்கும் மேற்பட்டோர் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
  என்.எஃப்.பி.இ. செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகரஆசாத் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிவைத்தார். மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்க செயலர்ஆர். ஞானமோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், ஒன்றியச் செயலர் காரல்மார்க்ஸ், தமிழ்நாடு முற்போக்கு எமுத்தாளர் சங்க செயலாளர் வேதரத்தினம், திமுக தலைமை கழகப் பேச்சாளர் உதயகுமார் உள்ளிட்டோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.
   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் எம். வையாபுரி உண்ணாவிரத்தை முடித்து வைத்தார்.  அஞ்சல் ஊழியர் சங்க செயலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai