சுடச்சுட

  

  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்

  By DIN  |   Published on : 03rd June 2018 07:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 865 மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சா. குணசேகரன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
  மேலும் 2018 மார்ச், ஏப்ரலில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் 83 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91 சதவீதம், எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் 81 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற மாணவிகளையும், அதற்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளையும் பாராட்டி, இனிப்புகளை வழங்கினார்.
  இந்நிகழ்ச்சியில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் அ. வெற்றிவேலன், உதவி தலைமை ஆசிரியை வனிதா செந்தில்ராஜ், பட்டதாரி ஆசிரியர்கள் க. வள்ளிமணவாளன், க. கணேசன், ஏ.சின்னதுரை, பள்ளி துணைத்தலைவர் எஸ்.டி. காமராஜ், இணைச் செயலர் பி. கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் பு. சேகர், சாமிநாதன், ரெத்தினகுமார், ராஜராஜசோழன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai