சுடச்சுட

  

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

  By DIN  |   Published on : 03rd June 2018 07:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் அருகேயுள்ள கொல்லாபுரத்தில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏராளமானோர் சனிக்கிழமை இணைந்தனர்.
  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட மகாராஜபுரம், பேரளம், மேனாங்குடி, கொல்லாபுரம் ஆகிய ஊராட்சிகளிலிருந்து ஏராளமானோர் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இதையொட்டி, கொல்லாபுரத்தில் கொடியேற்றம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. 
  நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம் பேசினார். நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தீன. கெளதமன் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.பி. முருகானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. முத்தையன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எப். அல்போன்ஸ், ரமேஷ், கணேஷ், செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai