சுடச்சுட

  

  உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சோழப்பாண்டியில் பொதுமக்கள், விவசாயிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
  மன்னார்குடி அருகேயுள்ள சோழப்பாண்டியில் நடைபெற்ற போராட்டத்துக்கு கிராம கமிட்டி நிர்வாகிகள் எஸ். ரவீந்திரன், எஸ். சக்திவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். காவிரி உரிமை மீட்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். ஊராட்சி முன்னாள் தலைவர்கள் சத்தியமூர்த்தி (ஏத்தக்குடி), டி. ராஜேந்திரன் (தலையாமங்கலம்) எம்.ஆர். பாண்டியன் (சோழப்பாண்டி) உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai