சுடச்சுட

    

    திருவாரூர் அருகேயுள்ள திருப்பள்ளி முக்கூடலில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான மேடை நாடகம், தெருமுனைப் பிரசாரத்தை  அண்மையில்  நடத்தின.
    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான எஸ். கோவிந்தராஜன் பங்கேற்று, பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பு குறித்துப் பேசினார். மேலும், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கினார்.
    நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா டார்லிங், வழக்குரைஞர்கள் தாரணி, லதா ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட குற்ற ஆவணப் பிரிவு காவல் ஆய்வாளர் கலைவாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai