சுடச்சுட

  

  கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 03rd June 2018 07:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறுகிறது என மண்டல இணைப்பதிவாளர் கோ. காந்திநாதன் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும் குறித்த மூன்று சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 2018 ஜூன் 1-இல் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி காலம் 36 வாரங்கள்.
  இந்த பயிற்சி அனுபவம் மிகுந்த விரிவுரையாளர்களைக் கொண்டு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
  எனவே வேலைவாய்ப்புக்காக கூடுதல் தகுதியான இத்தொழில் பயிற்சியில் சேர விரும்புவோர் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலக வேலை நாள்களில் விண்ணப்பங்களைப் பெற்று பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.
  கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூர் என்ற முகவரியிலோ அல்லது 04366-227233, 9443711795, 8825928327 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai