சுடச்சுட

  

  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 11-இல் தொடக்கம்

  By DIN  |   Published on : 03rd June 2018 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2018 - 19 ஆம்  கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன்11-ஆம் தேதி தொடங்குகிறது. 
  இப்பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டமேற்படிப்பு, இரண்டாண்டு பட்டமேற்படிப்பு, எம்.பில்., பிஎச்.டி. ஆய்வுகள் என 22-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் 25-ஆம் தேதி மே மாதம் வெளியிடப்பட்டது.
  இதைத்தொடர்ந்து, திருவாரூரிலுள்ள  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு மற்றும் சேர்க்கை,  ஜூன்11-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு, பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
   சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இப்பல்கலைக்கழகத்தில் முதுகலைச் செம்மொழித் தமிழ் இரண்டாண்டு பட்டமேற்படிப்பில் சேர்வதற்கு தேர்வாகும் மாணவர்களுக்குப் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் இரண்டாண்டுக்கான புத்தகங்கள் வாங்குவதற்கு நிதியுதவியாக ரூ. 5,000 வழங்கப்படும்.
   இதுகுறித்து திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் ப.வேல்முருகன் தெரிவித்திருப்பது
  2018 -19ஆம் கல்வியாண்டிற்கான முதுகலைத் தமிழ் பட்டமேற்படிப்புக்கு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 45 பேர் நுழைவுத் தேர்வு எழுதினர். இவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சேர்க்கை ஜூன்11-ஆம் தேதி பல்கலைக்கழகத் தமிழ்துறையில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், இளங்கலைப் பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் புரொவிஷனல் அல்லது பட்டச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் அத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3 ஆகியவறை கொண்டுவர வேண்டும். சேர்க்கைக்கான கட்டணத்தொகை ஆன்லைனில் செலுத்தவேண்டும். இது தொடர்பான விவரங்களை பல்கலைக்கழக இணையதளமான w‌w‌w.​c‌u‌t‌n.​a​c.‌i‌n இல் காணலாம். கூடுதல் விவரங்களுக்கு 9787946046 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai