சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பெரியநாயகி அம்பிகை சமேத கைலாசநாதர் கோயில் மகாகும்பாபிஷேகம் திங்கள்கிழமை (ஜூன் 4) காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள் கடக லக்னத்தில் நடைபெறுகிறது.
  இதை முன்னிட்டு விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் கடந்த இருநாள்களாக நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமை அதிகாலை 5.30 முதல் 9 மணிக்குள் யாகபூஜைகள், ஜபம், ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பூர்ணாஹுதி 4-ஆம் காலம், காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30 முதல் 10 மணிக்குள் விமானங்கள், ராஜகோபுரம், மகாகும்பாபிஷேகம் இரவு 7 மணிக்கு  சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறவுள்ளன.
  யாக பூஜைகளை திப்பிராஜபுரம் ஜெ. வெங்கடேச குருக்கள், ராஜகுரு, ஜகன் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
  கும்பாபிஷேக ஏற்பாடுகளை உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பார்வையிட்டு, அளித்த ஆலோசனைப்படி அறநிலையத்துறை கோயில் நிர்வாக அதிகாரி க. சிவகுமார், தக்கார் எஸ். தமிழ்மணி மற்றும் கைலாசநாதர் நற்பணி மன்றத்தினர், தெருவாசிகள் செய்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai