Enable Javscript for better performance
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  தண்ணீரை குடித்த 17 பேருக்கு பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  தண்ணீரை குடித்த 17 பேருக்கு பாதிப்பு

    By DIN  |   Published on : 03rd June 2018 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடித்த 17 பேர் வாந்தி எடுத்ததால் அவர்களுக்கு புதன்கிழமை திருமக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. 
    மன்னார்குடி அருகே தென்பரை ஊராட்சிக்குள்பட்ட வடக்கு தென்பரையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் இக்கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வழக்கம்போல், புதன்கிழமை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை பிடித்து பயன்படுத்தியவர்களுக்கு குமட்டல், வாந்தி ஏற்பட்டு உடல்நலம்  பாதிக்கப்பட்டது. இதையடுத்து,  வடக்கு தென்பரையைச் சேர்ந்த மகாலெட்சுமி (50), கமலா (50) உள்ளிட்ட 12 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 17 பேர் சிகிச்சைக்காக திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்று சென்றனர். 
    இதையடுத்து, திருமக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஹரிராஜ், விஜய்ஆனந்த் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர், வடக்கு தென்பரைக்கு வந்து சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து கிராமத்தினர் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சையளித்தனர். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முறையாக பராமரிக்காமல், சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், தண்ணீர் குடித்தவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai