Enable Javscript for better performance
ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரமும் அடிப்படை வசதிகள் தொடர கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரமும் அடிப்படை வசதிகள் தொடர கோரிக்கை

    By DIN  |   Published on : 04th June 2018 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் 24 மணி நேரமும் தொடர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    நீடாமங்கலம் ரயில் நிலையம் வழியாக காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில், காரைக்கால்- எர்ணாகுளம் விரைவு ரயில், மன்னார்குடி-சென்னை விரைவு ரயில், மன்னை-கோவை செம்மொழி விரைவு ரயில், மன்னார்குடி -மானாமதுரை பயணிகள் ரயில், கோவா காரைக்கால் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகிறது. ஏராளமான உள்ளூர், வெளியூர்  பயணிகள் நீடாமங்கலம் ரயில்நிலையம் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளுக்கு நவீன கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் போதுமானதாக இல்லை. குடிநீர் வசதி கூட அனைத்து குடிநீர் குழாய்களுக்கும் ரயில் வரும் நேரத்தில் தான் குடிநீர் வழங்கப்படுகிறது.
    ரயில் சென்றவுடன் குடிநீர் விநியோகம் பெரும்பாலான குடிநீர் குழாய்களுக்கு நிறுத்தப்படுகிறது. ஒரு சில குடிநீர் குழாய்களில் மட்டுமே 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல் கழிப்பறைகளும் ரயில் வரும் சற்றுமுன் திறந்து வைக்கப்பட்டு ரயில் சென்றவுடன் பூட்டப்படுகிறது.
    இதுதொடர்பாக ரயில்வே வட்டாரங்களில் விசாரித்தபோது 24 மணி நேரமும் கழிப்பறைகளை திறந்து வைத்திருந்தால் அது பொதுக்கழிப்பறையாக உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. அதனால் கழிப்பறைகள் துர்நாற்றம் ரயில் நிலைய அலுவலகத்தில்  வீசுகிறது. அலுவலக பணிகளை கவனிக்க மிகுந்த சிரமமாகவுள்ளது.
    குடிநீர் அனைத்து குழாய்களுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகித்தால் அதிலும் சிரமம் உள்ளது. குடிநீரை மதுகுடிக்க பயன்படுத்துகிறார்கள். மேலும், ரயில் வந்து செல்லும் நேரங்களில் கேட் மூடப்பட்டிருந்தால் கேட்டிற்குள்ளாக வாகனங்களை சாய்த்து மறுபுறம் செல்வது ரயில் வரும் நேரத்தில் இருப்புப்பாதையை கடப்பது போன்ற செயல்களிலும் பலர் ஈடுபடுகின்றனர். இதை ரயில்வே உயர் அலுவலர்கள் பார்த்தால் ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் கோபப்படுகிறார்கள் என்றும் கூறுகின்றனர். பொதுமக்களில் சிலர் செய்யும் இதுபோன்ற செயல்களால் ரயில் பயணிகள் அடிப்படை வசதிகளை பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலை உள்ளது. நாள் முழுவதும் ரயில் வந்து செல்லும் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதி 24 மணி நேரமும் தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கையாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai