சுடச்சுட

  

  திருவாரூரில் உரிய அனுமதியின்றி மதுபானம் விற்றதாக ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
  திருவாரூர் பனகல் சாலையில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் கடை, நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டது. ஆனால் அதன் அருகே மூடப்பட்ட பாரில் அனுமதியின்றி மதுபானம் விற்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டனவாம்.
  இதேபோல், திங்கள்கிழமை அந்த பாரில் மதுபானம் விற்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள், மதுபானம் விற்றவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் திருவாரூரைச் சேர்ந்த கார்த்தி (38) என்பதும், அங்கு மதுபானம் விற்றதும் தெரியவந்தது.
  இதுகுறித்து திருவாரூர் நகரப் போலீஸார் வழக்குப் பதிந்து கார்த்தியை கைது செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai