சுடச்சுட

    

    இளம்பெண் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூவர் விஷம் குடிப்பு

    By DIN  |   Published on : 05th June 2018 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண்ணைத் தாக்கிய வழக்கில் போலீஸார் தேடிவந்த இளைஞர்கள் மூவர், விஷம் குடித்த நிலையில், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு சாலைத்தெருவைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் மகள் உமா (20).
    இவர், திருத்துறைப்பூண்டியில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கோகுல் (20), சுந்தரபாண்டியன் (20), வெற்றிவேல் (25) ஆகியோர் உமாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
    இதுதொடர்பாக, திருத்துறைப்பூண்டி போலீஸார் மூன்று இளைஞர்கள் மீதும் வழக்குப் பதிந்து, அவர்களை தேடிவந்தனர்.
    இந்நிலையில், மூவரும் விஷம் குடித்த நிலையில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai