காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க இஃப்தார் விருந்து
By DIN | Published on : 05th June 2018 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கூத்தாநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில், மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், கூத்தாநல்லூர் செய்யது உசேன் சாலையில் அமைந்துள்ள அனார் மன்ஜிலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் எஸ்.சிகாபுதீன் தலைமை வகித்தார்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் .எம்.பி. துரைவேலன், மாவட்டப் பொதுச் செயலாளர் அன்பு வே. வீரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் எம்.எம். அஹம்மது அலி வரவேற்றார்.
இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஷேக்மஸ்தான் வாலி, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெ. அஸ்லம் பாஷா, காங்கிரஸ் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, திருவாரூர் மாவட்டத் தலைவர் சிவ. கதிர்வேல், திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி சமூக ஊடகப் பொறுப்பாளர் எஸ்.எம். சமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.